சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் திராவிடர் கழக தலைவர் வீரமணி பேச்சு

சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசினார்.

Update: 2023-02-08 17:28 GMT

முசிறியில் திராவிடர் கட்சி சார்பில் சமூக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ரத்தினம் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ஆல்பர்ட், மாவட்ட தலைவர் வால்டர், முசிறி நகர செயலாளர் சீனிவாசன், ஒன்றிய தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசும்போது, பல நாடுகளில் மனிதன் மனிதனாக உள்ளான். ஆனால் நமது நாட்டில் மட்டும் மனிதன் மனிதனாக இருப்பதில்லை, காரணம் மனிதனுக்கு மனிதனே தங்களை வேற்றுமைப்படுத்துகிறான். இந்த வேற்றுமையை ஒற்றுமை படுத்துவதற்கு தான் திராவிட கழகம் போராடி வருகிறது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என கிராமத்தில் பெரியோர்கள் கூறியது தற்போது கூறு போடப்பட்டுள்ளது. ராமர் பாலம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என பா.ஜனதா மந்திரியே கூறுகிறார். ஆகவே தடைப்பட்டு இருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்