திராவிட தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
திராவிட தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திராவிட தமிழர் கட்சியினர் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசி வருகிற சீமானை கைது செய்ய வேண்டும் என்று கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில நிதி செயலாளர் சங்கர், மாவட்ட செயலாளர் திருக்குமரன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.