திராவிட தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

திராவிட தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2022-09-02 22:19 GMT

நெல்லை மேலப்பாளையத்தில் திராவிட தமிழர் கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது அநீதி இழைக்கப்பட்ட பில்கிஸ் பானு என்ற பெண்ணுக்கு தற்போது மீண்டும் அநீதி இழைக்கப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் நெல்லை கதிரவன் பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் முத்துவளன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார், தமிழர் உரிமை மீட்பு களம் ஒருங்கிணைப்பாளர் லெனின், ம.ஜ.க. மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தமிழரசு, நெல்சன், பாலமுருகன், கிங்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்