திருவாவடுதுறை ஆதீனம் முன்னிலையில் திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு

குத்தாலம் அருகே மந்தைவெளி திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு, திருவாவடுதுறை ஆதீனம் முன்னிலையில் நடந்தது

Update: 2023-06-09 18:45 GMT

குத்தாலம்:

குத்தாலம் அருகே மந்தைவெளி திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு, திருவாவடுதுறை ஆதீனம் முன்னிலையில் நடந்தது.

திரவுபதி அம்மன் கோவில்

குத்தாலம் அருகே திருவாவடுதுறை கிராமம் மந்தைவெளியில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோவில் குடமுழுக்கு விழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமங்கள் நடந்தது.

அதனை தொடர்ந்து கோ பூஜையுடன் இரண்டாம் கால யாக சாலை பூஜை தொடங்கப்பட்டு பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு மஹா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.

புனிதநீர் ஊற்றப்பட்டு...

பின்னர் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலின் விமான கலசத்தை வந்தடைந்தது. தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.

பூஜைகளை இடவை தண்டபாணி சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில் ஆதீன கட்டளை வேலப்ப தம்பிரான் சாமிகள், ஆதீன கண்காணிப்பாளர் சண்முகம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்