திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு

திருப்பாலைத்துறை திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.

Update: 2023-07-14 20:39 GMT

பாபநாசம்:

பாபநாசம் திருப்பாலைத்துறையில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு நடந்தது.முன்னதாக யாத்ராஹோமம், சோமகும்பபூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடந்தது. இதை தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி கோவில் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சக்திவேல், ஆய்வாளர் லட்சுமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்