பச்சிளங்குழந்தையை காணவில்லை என தாய் நாடகமாடியது அம்பலம்

தொட்டிலில் தூங்கிய பச்சிளம் குழந்தையை குடிநீர் தொட்டிக்குள் போட்டு விட்டு காணவில்லை என்று தாய் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

Update: 2022-06-18 18:01 GMT

திருப்பரங்குன்றம்,

தொட்டிலியில் தூங்கிய பச்சிளம் குழந்தையை குடிநீர் தொட்டிக்குள் போட்டு விட்டு காணவில்லை என்று தாய் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

பச்சிளங்குழந்தை சாவு

திருப்பரங்குன்றம் மேட்டுத் தெருவில் வசித்து வருபவர் மகாராஜன் (வயது 40).இவரது மனைவி சித்ரா (37) இவர்களுக்கு 2 ஆண்குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் சித்ரா தனக்கு 3-வதாக பிறந்த 38 நாட்களான ஒரு ஆண் குழந்தையை காணவில்லை என்று கூறி அந்த பச்சிளங் குழந்தையை தேடினார்.

இந்த நிலையில் அவரதுவீட்டின் அருகே மாடியில் உள்ள குடிநீர் தொட்டிக்குள் குழந்தை பிணமாக கிடந்தது. இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து குடிநீர் தொட்டிக்குள் கிடந்த பச்சிளங் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரி வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 15-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை செய்து துப்புதுலக்கினார்.

தாயின் நாடகம் அம்பலம்

இதற்கிடையே கிடுக்குப் பிடியாக சித்ராவிடம் 2 நாட்களாக தொடர்ந்து துருவி, துருவி விசாரணை செய்தனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்ததாக தெரிகிறது. அதனால் போலீசாருக்கு சித்ரா மீது வலுத்த சந்தேகம் ஏற்பட்டது. சித்ராவிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது சித்ரா தனது பச்சிளங் குழந்தைக்கு மூச்சு திணறல் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று தொட்டிலியில் தூங்கிய நிலையிலேயே உடல் அசைவின்றி இருந்தது. இதனால் தன் மீது பழி வந்துவிடும் என்ற பயத்தால் குடிநீர் தொட்டிக்குள் குழந்தையை போட்டுவிட்டேன். பிறகு குழந்தையை காணவில்லை என்று கூறியதோடு தன் மீது சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே குழந்தையை தேடினேன் என்று கூறினார். இதையடுத்து சித்ரா நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் நேற்று சித்ராவை கைது செய்து மேல்விசாரணை செய்துவருகின்றனர்.

விசாரணை

இறந்த பச்சிளங் குழந்தையைதொட்டிலியில் இருந்து தூக்கி அருகில் உள்ள வீட்டின் மாடிக்கு கொண்டு சென்று குடிநீர் தொட்டிக்குள் போட்டது ஒருவரால் முடியுமா? மேலும் சித்ராவிற்கு உடந்தையாக சிலர் ஈடுபட்டு இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்