கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என மாநகராட்சி அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்.
கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும்என மாநகராட்சி அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்.
வேலூர் மாவட்ட பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையிலான நிர்வாகிகள் வேலூர் மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலம் 52-வது வார்டு கன்னிகாபுரம், வசந்தம்நகர், கணபதிநகர், ஏ.எஸ்.நகர், ரத்தினசாமி லேஅவுட் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் வசதி கிடையாது. அதனால் இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் விடப்படுகிறது. கழிவுநீர் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் குட்டைபோன்று தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இங்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.
மேலும் 46-வது வார்டு தியாகராஜ் சாலை விரிவு பகுதியில் 40 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியையொட்டி முட்புதர்கள், காலிமனைகள் உள்ளன. மின்விளக்கு இல்லாததால் இரவில் மர்மநபர்கள் அந்த பகுதியில் அமர்ந்து மது அருந்துகிறார்கள். எனவே அங்கு புதிதாக தெருவிளக்கு அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.