பயிர்களில் நீர் தேங்காதவாறு வடிகால் அமைக்க வேண்டும்

பயிர்களில் நீர் தேங்காதவாறு வடிகால் அமைக்க வேண்டும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-30 17:41 GMT

திருப்பத்தூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தீபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள தோட்டக்கலை பயிர்களில் 75 சதவீதம் பழுத்த பழங்களை அறுவடை செய்ய வேண்டும். வாழைக்கு சவுக்கு கம்புகளை காற்றின் எதிர் திசையில் முட்டுக் கொடுக்க வேண்டும். பயிர்களில் நீர் தேங்காத வகையில் வடிகால் அமைக்க வேண்டும். உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி போன்றவற்றை தெளிக்கக்கூடாது. மரங்களில் பட்டுப்போன கிளைகளை வெட்ட வேண்டும். மரங்களை சுற்றி காற்றினால் பாதிப்பு ஏற்படாதவாறு மண் அணைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்