வடிகால் சீரமைப்பு பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும்

வடிகால் சீரமைப்பு பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும்

Update: 2023-08-31 18:45 GMT

பருவமழை தொடங்குவதற்குள் வடிகால் சீரமைப்பு பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நகராட்சி கூட்டம்

நாகை நகராட்சி கூட்டம் தலைவர் மாரிமுத்து தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:-

துணைத்தலைவர் செந்தில்குமார்: நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் குப்பை அள்ளுவதற்கு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததால் குப்பைகள் கையாள்வதில் பிரச்சினை உள்ளது. பருவமழை தொடங்குவதற்குள் வடிகால் சீரமைப்பு பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும்.

வனிதா (தி.மு.க.): எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் இணைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைகளை ஆய்வு செய்ய வேண்டும்.

சுரேஷ் (சுயே): நாகை நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் பாரபட்சம் காட்டக்கூடாது.

டிஜிட்டல் போர்டுகளை அப்புறப்படுத்த வேண்டும்

ஜோதிலட்சுமி(இ.கம்யூ): நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. 4 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

பதுர்நிஷா (தி.மு.க.): 5-வது வார்டுக்கு உட்பட்ட ஆட்டுத்தொட்டி பகுதியில் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து நகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்தால் நடவடிக்கை இல்லை. மேலும் குடிநீர் பிரச்சினையும் உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சத்தியவாணி (தி.மு.க.): வெறிநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிக்கு குழந்தைகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முன் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டுகளை அப்புறப்படுத்த வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்