தொடர்ந்து 8-வது நாளாக வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

Update: 2022-06-07 18:37 GMT

அந்தியூர் அருகே பர்கூர் மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்து உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 33.4 அடி ஆகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக கல்லுப்பள்ளம், வரட்டுப்பள்ளம், கும்பரவாணிப்பள்ளம் ஆகியவை உள்ளன. கடந்த ஒரு மாதமாக பர்கூ்ா மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த 30-ந் தேதி வரட்டுப்பள்ளம் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அன்றில் இருந்து நேற்று வரை தொடர்ந்து 8-வது நாளாக வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 9 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 9 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது.

இந்த உபரிநீரானது அந்தியூர் அருகே உள்ள ெகட்டி சமுத்திரம் ஏரி மற்றும் அந்தியூர் பெரிய ஏரிக்கு செல்கிறது. இதன்காரணமாக ஏரிகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்