டாக்டர் வி.ஜி.என். மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை

பிளஸ்-2 பொதுத்தேர்வில் டாக்டர் வி.ஜி.என். மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2023-05-10 17:59 GMT

அரக்கோணம் டாக்டர் வி.ஜி.என். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதியவர்களில் மாணவி கு.அபிநயா முதல் இடமும், ஷப்ரின் 2-ம் இடத்தையும், மாணவர் சி.பரத் 3-வது இடத்தையும் பிடித்தனர். மேலும் பிளஸ்-2 தேர்வு எழுதிய 107 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதில் 19 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். 500 மதிப்பெண்களுக்கு மேல் 44 பேர், 450 மதிப்பெண்களுக்கு மேல் 41 பேர், 350 மதிப்பெண்களுக்கு மேல் 22 பேர் பெற்று சாதனை படைத்தனர்.

தேர்ச்சிப்பெற்ற அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களையும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தலைவர் டி.ஆர். சுப்பிரமணியம், தாளாளர் என். தனபால் நாயுடு, இணைச் செயலாளர் கு.துரை நாயுடு மற்றும் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் டி.எஸ்.முரளி நாயுடு, பள்ளி முதல்வர் டாக்டர்.வி.வனிதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்