டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் 87-வது பிறந்தநாள் தலைவர்கள் மரியாதை

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் -தினத்தந்தி குழும இயக்குனர், குடும்பத்தினர், அமைச்சர்கள், அரசியல்கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்;

Update: 2022-09-24 05:30 GMT


Full View

சென்னை

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட புகைப்படத்திற்கு 'தினத்தந்தி' குழும தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் மற்றும் குடும்பத்தினர் மலர் மாலை சூட்டி மரியாதை செலுத்தினர். பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மாலை அணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.

சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் ம..தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்.

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்தநாளையொட்டி 'தினத்தந்தி' குழும தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், மகளிருக்கான தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.


சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  மரியாதை செலுத்தினார்.



பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்ள அவரது மணிமண்டபம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87 ஆவது பிறந்தநாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டுவருகிறது.

விழாவில் அமைச்சர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.காயாமொழி ஊர் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்