டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினவிழா
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினவிழா கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியின் ஐ.கி.யு.ஏ.சி. சார்பில் கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உள்விளையாட்டு அரங்கில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் நெல்சன் துரை வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பரமக்குடி அரசு கலை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பிரசாத் கலந்து கொண்டு சர்வதேச யோகா தினம் குறித்து பேசி, மாணவ, மாணவியருக்கு யோகா மற்றும் தியான பயிற்சி கற்று கொடுத்தார். முன்னதாக கல்லூரி உதவி பேராசிரியர்கள் சிவா, அருள் ரூபன் ஆகியோர் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அனுபவித்து, நினைவு பரிசு வழங்கினர். நிகழ்ச்சிகளை உதவி பேராசிரியர் செல்வக்குமார் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி ஐ.கி.யு.ஏ.சி. ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி நன்றி கூறினார்.