டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் வளாகத் தேர்வு

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் வளாகத் தேர்வு நடந்தது.

Update: 2023-02-11 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் சாரதா கல்வி குழுமத்தின் சார்பில் வளாகத் தேர்வு நடந்தது. கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் நாராயணராஜன் வாழ்த்தி பேசினார்.சாரதா கல்வி குழும தாளாளர் பெருமாள்சாமி சாரதா கல்வி குழுமத்தின் சிறப்பியல்புகளையும், கல்வி நிலையங்களையும் பற்றி மாணவர்களிடம் எடுத்துரைத்தார். சாரதா கல்வி குழும செயலாளர் நந்தினி கலந்து கொண்டு வளாகத் தேர்வினை நடத்தினார். இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் சாரதா கல்வி குழும பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். பேராசிரியர்கள் சுந்தர் கணேஷ், வசந்தி வினோலியா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் உமா, ஆல்வின் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்