டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா
சுரண்டையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
சுரண்டை:
தென்காசி மாவட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம், சுரண்டை பாத்திர சக்கரவர்த்தி எஸ்.வேலாயுத நாடார் கோமதியம்மாள் (எஸ்.வி.ஜி) அறக்கட்டளை சார்பில், சுரண்டையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு நற்பணி மன்ற தென்காசி மாவட்ட தலைவர் எஸ்.வி.கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
சுரண்டை நாடார் வாலிபர் சங்க செயலாளர் ஆர்.வி.ராமர், பொருளாளர் ஜி.எஸ்.எஸ்.அண்ணாமலைகனி, துணை செயலாளர் எஸ்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் கே.டி.பாலன் வரவேற்று பேசினார். விழாவில் சுரண்டை நகராட்சி தலைவர் எஸ்.பி.வள்ளி முருகன், நற்பணிமன்ற கவுரவ ஆலோசகர் அனிதா செல்வன், இந்திய நாடார் பேரமைப்பு மாவட்ட தலைவர் எஸ்.ஆனந்த் காசிராஜன், சி.எம்.சங்கர், பேராசிரியர் சேர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முருகன் நன்றி கூறினார்.