டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழா

கோவில்பட்டியில் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழா நடந்தது.

Update: 2022-07-25 14:54 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் நேற்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் விழாவை யொட்டி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் செண்பகவல்லி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் முன்பு அன்ன தானம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. காந்தி மைதானத்தில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் மாடசாமி, அமைப்புச் செயலாளர் காளிராஜ், இளைஞர் அணி துணைத் தலைவர் மகாராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் லெனின் குமார், கயத்தாறு ஒன்றிய செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்