டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா

தேனியில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-09-24 17:47 GMT

தேனி மாவட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில், 'தினத்தந்தி' அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா தேனியில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் நற்பணி மன்ற மாவட்ட பொறுப்பாளர் ஜெய்முருகேஷ் தலைமையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயுட்கால உறுப்பினர்கள் கமலக்கண்ணன், வேலுச்சாமி, செண்பகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தேனியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட தலைவர் அருள்பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில வர்த்தகர் அணி தலைமை நிலைய செயலாளர் சிவகுமார், மாநில செயலாளர் ஆசைத்தம்பி, மாநில பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். விழாவில், மாவட்ட செயலாளர் குமரேசபாண்டியன், மாவட்ட பொருளாளர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்