பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை:கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

ஆண்டிப்பட்டி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update: 2023-07-06 18:45 GMT

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லதா (வயது 28) இவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், எனக்கும், போடி மேலசொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நான் அணிந்திருந்த நகையை எனது கணவர் அடகு வைத்து வீடு கட்டினார். மேலும் அவர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன், என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் வரதட்சணை கொடுமை செய்ததாக ராமச்சந்திரன், அவரது தாயார் செல்லம் மற்றும் ஜெயந்தி ஆகிய 3 பேர் மீது, ஆண்டிப்பட்டி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்