பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

ராமநாதபுரம் அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-04-13 18:45 GMT

ராமநாதபுரம் அருகே உள்ள தொருவளுர் கவரங்குளம் பகுதியை சேர்ந்தவர் துரைக்கண்ணு மகன் அன்புமுருகன் (வயது 40). இவருக்கும் கவிதா (36) என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தின்போது கவிதா வீட்டினர் 18 பவுன் தங்க நகையும், அன்புமுருகனுக்கு 5 பவுன் தங்க நகையும், ரூ.1½ லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருள்களும் கொடுத்துள்ளனர். திருமணமான நாள் முதல் சீர்வரிசை பத்தாது, நகை பத்தாது என்று கூறி அன்புமுருகன் மற்றும் அவரின் தாய் சரஸ்வதி ஆகியோர் கூறி கொடுமைப்படுத்தியதோடு மேலும், 10 பவுன் நகையும், ரூ.5 லட்சத்தையும் வாங்கி வரும்படி கூறினார்களாம். இதற்கு வழிஇல்லை என்று கூறியதால் கவிதாவை வீட்டைவிட்டு விரட்டிவிட்டார்களாம். இதுகுறித்து கவிதா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்