இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

கம்பம் அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-04-12 19:00 GMT

கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில், கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்தநாளையொட்டி பெரியாறு- வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் தேன் சிட்டு, தட்டான்சிட்டு, புள்ளிமான் சிட்டு, நடு மாடு, பெரிய மாடு என 5 பிரிவாக பந்தயம் நடைபெற்றது. போட்டியில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 125 மாட்டுவண்டிகளுடன் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். சுருளிபட்டி-சுருளி தீர்த்தம் சாலையில் மாடுகளின் வயதை கணக்கில் வைத்து போட்டியின் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் வென்ற மாடுகளுக்கும், பங்ேகற்றவர்களுக்கும் ரொக்கப் பரிசு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. போட்டியை காண சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்