கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

Update: 2022-11-17 19:16 GMT

சாயல்குடி

சாயல்குடி அருகே ஒப்பிலான் ஊராட்சி எம்.ஆர்.பட்டினம் கிராமத்தில் ஸ்ரீகற்பனை சாமி கோவில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மாட்டுவண்டி பந்தயத்தில் பெரிய மாடு 9 ஜோடிகளும், சின்ன மாடு 27 ஜோடிகளும், பூஞ்சிட்டு 16 ஜோடிகளும் கலந்து கொண்டன. பெரியமாடு பந்தயத்தில் முதல் பரிசு சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவர் மாடு பெற்றது. 2-வது பரிசை சிவகங்கை மாவட்டம் உடப்பன்பட்டி சிவ சின்னையா என்பவரது மாடும், 3-வது பரிசு ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைகுளம் வீரமுனியசாமி என்பவரது மாடும் பெற்றது. பெரிய மாடு முதல் பரிசு சின்ன மாடு இரண்டாவது பரிசு பூஞ்சிட்டில் மூன்றாவது பரிசு ஆக மூன்று போட்டியிலும் சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடும் வெற்றி பெற்றது இப்போட்டியில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. சாலையின் இருபுறமும் நின்று மாட்டுவண்டி பந்தயத்தை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டி பந்தய வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்