வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி

விழுப்புரம் மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தொடங்கியுள்ளது. எனவே பொதுமக்கள், இப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் பழனி அறிவுரை வழங்கியுள்ளார்.

Update: 2023-07-23 18:45 GMT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வரைவு வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையில் 1.1.2024-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு வருகிற 17.10.2023 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு முன்திருத்த நடவடிக்கைகளுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடத்தி வருகிற 17.10.2023 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இதை முன்னிட்டு முன்திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விவரங்களையும் சரிபார்த்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21-ந் தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

வீடு, வீடாக சரிபார்ப்பு பணி

இதற்கான தொடர் நடவடிக்கையாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், பெயர் நீக்கம் செய்தல் மற்றும் 22.8.2023 முதல் 29.9.2023 வரை வாக்குச்சாவடிகள் பிரித்தல், இடம் மாற்றம், வாக்குச்சாவடி கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதையொட்டி முன்திருத்த நடவடிக்கையின் முதல்கட்ட நடவடிக்கையாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக குடும்பத்தில் உள்ள வாக்காளர் விவரங்களை சரிபார்க்க வருகை தர உள்ளனர். எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் இப்பணியை சிறப்பாகவும், விரைவாகவும் மேலும் 100 சதவீதம் சரியாகவும், துரிதமாகவும் முடித்திடும்பொருட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்