தமிழக டிஜிபி பெயரில் பரவும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் - டிஜிபி அலுவலகம்

தமிழக டிஜிபி பெயரில் பரவும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்று டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.;

Update: 2022-08-18 03:53 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் ஆன்லைன் முறையிலான மோசடி நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த ஆன்லைன் மோசடியில் பெரும்பாலான மக்கள் தங்களது பணம், சுய விபரங்களை பறிகொடுத்து வருகின்றனர். இந்த மோசடியை தடுக்க காவல்துறை மற்றும் சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக டிஜிபி பெயரில் பரவும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு டிஜிபி அலுவலகம் அறிவுரை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

காவல்துறை தலைமை இயக்குநர் என்று தங்களை அறிமுகப்படுத்துக் கொண்டு போலி நபர்கள் அமேசான் அன்பளிப்பு கூப்பன்கள் வாங்கி அனுப்பும்படி 'வாட்ஸ்-அப், SMS குறுஞ்செய்தி அனுப்பவதாக தெரிய வருகிறது.

இந்த போலியான குறுஞ்செய்தியை பொருட்படுத்த வேண்டாம். போலி குறுஞ்செய்திகளை அனுப்புவோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி குறுஞ்செய்திகளை அனுப்பும் அந்த நபரை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்