மோசடி நபர்கள் செல்போனில் அழைத்தால் மகளிர் உரிமைத்தொகை குறித்த தகவல்களை யாருக்கும் சொல்ல வேண்டாம்; கலெக்டர் ராஜகோபால் சுன்கரா எச்சரிக்கை

மகளிர் உரிமைத்தொகை குறித்த தகவல்களை மோசடி நபர்கள் செல்போன்களில் கேட்கும் வாய்ப்பு உள்ளதால் யாருக்கும் கூற வேண்டாம் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2023-09-15 21:24 GMT

மகளிர் உரிமைத்தொகை குறித்த தகவல்களை மோசடி நபர்கள் செல்போன்களில் கேட்கும் வாய்ப்பு உள்ளதால் யாருக்கும் கூற வேண்டாம் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

பெண்களுக்கான திட்டங்கள்

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் விழா ஈரோடு திண்டலில் நேற்று நடந்தது.

இந்த விழாவுக்கு தலைமை தாங்கி மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசும்போது கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் இலவச பஸ் பயணம், காலை உணவு திட்டம் மற்றும் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டங்கள் மிகச்சிறப்பானவை.

எச்சரிக்கை

இதை பெண்கள் முழுமையாக உணர்ந்து அவற்றின் பயனை பெற்றிட வேண்டும். இலவச பஸ் பயணம், காலை உணவு திட்டம் ஆகியவற்றால் பெண்களுக்கு பணம் மிச்சமாகிறது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் பணம் கைக்கு கிடைக்கிறது. இப்போது உங்கள் உரிமைத்தொகை உங்கள் வங்கிக்கணக்கில் வருகிறது. பணம் வராதவர்களுக்கு மேல்முறையீடு செய்யவும் கால அவகாசம் உள்ளது. இந்த நேரத்தில் மோசடி நபர்கள் உங்கள் செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் வங்கி விவரங்கள், ஏ.டி.எம். எண் அல்லது ஓ.டி.பி. (ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல்) கேட்டால் எதையும் சொல்ல வேண்டாம்.

மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணம் கிடைத்தவர்களும் சரி, கிடைக்காதவர்களும் சரி செல்போன் மூலம் மகளிர் உரிமைத்தொகை குறித்த விவரங்களை யார் கேட்டாலும் சொல்ல வேண்டாம்.

இவ்வாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்