கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் - ஜி.கே.வாசன் எம்.பி. பேச்சு

கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்தார்.

Update: 2023-08-19 18:54 GMT

கோப்புப்படம்

சென்னை,

ஜி.கே.மூப்பனாரின் 92-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை சேப்பாக்கத்தில் நேற்று த.மா.கா. இலக்கிய அணி சார்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பாலம் கல்யாணசுந்தரம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபால் ஆகியோருக்கு ஜி.கே.மூப்பனார் விருதை வழங்கினார். நிகழ்ச்சிக்கு இலக்கிய அணி தலைவர் கே.ஆர்.டி.ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர்கள் ரவிச்சந்திரன், பிஜு சாக்கோ, சைதை மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பேசும்போது, கல்வியில் அரசியல் இருக்கக்கூடாது. மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இதேபோல மத்திய அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் காமராஜரின் கனவு. அது இன்று நிறைவேறியுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்