விவசாயிகளுக்கு விரைந்து பணம் பட்டுவாடா

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளுக்கு விரைந்து பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-09 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் தானிய மூட்டைகளை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து செல்கின்றனர். அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் தானியங்களுக்கு உடனுக்குடன் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வியாபாரிகள் பாக்கி வைத்திருந்தால் அது குறித்த தகவலை தெரிவித்தால் சம்பந்தப்பட்ட வியாபாரியை ஏலத்தில் கலந்து கொள்ள முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாயிகளிடம், எடைப்பணி தொழிலாளர்கள் மற்றும் சாக்கு மற்றும் தொழிலாளர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்தாலோ அல்லது வேறு வகையில் ஏதேனும் பிரச்சினையில் ஈடுபட்டாலோ அது குறித்த தகவலை தெரிவிக்கலாம். அதன்பேரில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்