தீபாவளி சிறுசேமிப்பு திட்டத்தில் கவர்ச்சிகர சலுகைகளை நம்பி ஏமாற வேண்டாம்

செய்யாறில் தீபாவளி சிறுசேமிப்பு திட்டத்தில் கவர்ச்சிகர சலுகைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-19 18:19 GMT

செய்யாறு

செய்யாறில் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பக்கம், பக்கமாக பல கவர்ச்சிகர திட்டங்கள் அறிவித்து நோட்டீசு அச்சடிக்கப்பட்டு பொதுமக்களிடையே வினியோகிக்கப்பட்டு வருகிறது.

அந்த நோட்டீசில் நிறுவனத்தின் பெயரோ, முகவரியோ, தொடர்பு எண்ணோ எதுவும் குறிப்பிடப்படாமல் கவர்ச்சிகர திட்டங்களை மட்டுமே குறிப்பிட்டு உள்ளது.

அதிக வட்டிக்கோ பொருட்களுக்கோ ஆசைப்பட்டு அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களை நம்பி முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் போலீசார் இதுபோன்ற மோசடி நிறுவனங்களை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் என எச்சரிக்கை நோட்டீசை கிராமங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் கூறுகையில், இதுசம்பந்தமாக புகார்கள் வந்தால், மோசடியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் மீதும் அதில் ஏஜெண்டுகளாக செயல்பட்டவர்களின் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்