"சட்டமன்றத்தில் கவர்னரை தாக்கி பேசக்கூடாது"- திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்

முதல் அமைச்சர் மு.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2023-01-10 07:30 GMT

சென்னை,

2023-ம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள பல வரிகளை கவர்னர் வாசிக்கவில்லை. மேலும், முதல் அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோதே கவர்னர் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து, இன்றைய 2ம் நாள் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர், பிரபலங்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டதை அடுத்து, அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை அறிஞர் அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் போது, சட்டசபையில் திமுகவின் எந்த ஒரு சட்டசபை உறுப்பினரும் கவர்னரை தாக்கி பேசக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திராவிட மாடல், தமிழ்நாடு உள்ளிட்ட வார்த்தைகளை கவர்னர் புறக்கணித்து வரும் நிலையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்