நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 55). இவர் கழுதையை பராமரித்து அதில் இருந்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். குழந்தைகளுக்கு கழுதை பாலை கொடுத்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் கழுதை பால் சளி, இருமல், மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாகும். இந்த நிலையில் ஈரோடு ராமமூர்த்தி நகர், கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் முத்துசாமி கழுதையில் இருந்து பாலை கறந்து விற்பனை செய்தார். இதை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
இது குறித்து முத்துசாமி கூறும்போது, 'நான் 20 வருடத்திற்கும் மேலாக கழுதை பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். பொதுவாக கழுதை பால் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக இருப்பதால் மக்கள் அதனை விரும்பி வாங்கி அருந்துகின்றனர். ஒரு சின்ன சங்கு பால் ரூ.50- க்கும், 50 மில்லி கழுதை பால் ரூ.250-க்கும் விற்பனை செய்கிறேன்' என்றார்.