தொண்டி பேரூராட்சி கூட்டம்

தொண்டி பேரூராட்சி கூட்டம் நடந்தது.

Update: 2023-04-27 18:45 GMT

தொண்டி, 

தொண்டி பேரூராட்சியின் சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மகாலிங்கம், துணைத்தலைவர் அழகு ராணி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தொண்டி பஸ் நிலையத்திற்கு டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பஸ் நிலையம் என பெயர் சூட்டுவது என்றும், அதன் நினைவாக இருபுறங்களிலும் நுழைவுவாயில் அமைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொண்டி பேரூராட்சியில் கிழக்கு கடற்கரை சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அதனை சரி செய்யும் வகையில் கனரக வாகனங்களை மாலை நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நிறுத்தாமல் தொண்டி பழைய பஸ் நிலையம் மற்றும் கைக்குளவர் ஊருணி அருகில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொண்டி பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கிட பேரூராட்சி பொது நிதியின் மூலம் திருவாடானை அருகே உள்ள சேந்தனி கிராமத்தில் புதிய ஆழ் குழாய் அமைக்கவும், தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவோடி அருகில் ஆதார் மையக்கட்டிடம் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்