முத்தாரம்மன் கோவில் விழாவில் அன்னதானம்
தூத்துக்குடி முத்தாரம்மன் கோவில் விழாவில் அன்னதானம் நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு ரதவீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அ.தி.மு.க. 39-வது வட்ட செயலாளர் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் 4 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.
இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.