அய்யப்பன் கோவிலில் அன்னதானம்

அய்யப்பன் கோவிலில் அன்னதானம்

Update: 2022-12-28 18:48 GMT

பனைக்குளம்

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்வது வழக்கம். அதன் தொடர்ச்சியாக 18-வது மண்டல பூஜை பேட்டைத்துள்ளல் மற்றும் பாராட்டு விழா நடந்து முடிந்து விழாவின் 10-ம் நாளான நேற்று முன்தினம் பேட்டைதுள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கோவில் சார்பில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான நிகழ்ச்சியை ஆலயத்தின் தலைமை குருசாமி மோகன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்து ஆலயத்தில் வல்லபை ஸ்ரீ ஐயப்பனை தரிசனம் செய்து தலைமை குரு சுவாமியின் ஆசி பெற்று சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்