விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள்

முதுமலையில் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகரை வளர்ப்பு யானைகள் வணங்கின.

Update: 2023-09-18 19:00 GMT

கூடலூர்

முதுமலையில் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகரை வளர்ப்பு யானைகள் வணங்கின.

விநாயகர் சதுர்த்தி விழா

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு நேற்று மாலை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. துணை இயக்குனர் வித்யா தலைமை தாங்கினார். வனச்சரகர்கள் பிரசாத், விஜய், பாலாஜி, மனோஜ், கணேசன் சதாம் உசேன்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அங்குள்ள விநாயகர் கோவிலை வளர்ப்பு யானை கிருஷ்ணா மணி அடித்து வலம் வந்தது. பின்னர் விநாயகருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது கோவில் முன்பு அணிவகுத்து நின்ற வளர்ப்பு யானைகள் துதிக்கைகளை உயர்த்தி பிளிறியவாறு விநாயகரை வணங்கின. கிருஷ்ணா யானை மண்டியிட்டு வணங்கியது.

வளர்ப்பு யானைகள்

இதையடுத்து வளர்ப்பு யானைகளுக்கு பாகன் பொம்மன் தீபாராதனை காண்பித்தார். பின்னர் யானைகளுக்கு கரும்பு, வெல்லம், அன்னாசி, தேங்காய், ஆப்பிள், மாதுளை மற்றும் கேழ்வரகு களி வழங்கப்பட்டது.

விழாவில் சுற்றுலா பயணிகள், வனத்துறையினர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்