மீனவர்கள் வலையில் சிக்கிய 2 டால்பின்கள் கடலில் விடப்பட்டன
சாயல்குடி அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய 2 டால்பின்கள் கடலில் விடப்பட்டன. மற்றொரு இடத்தில் பெண் டால்பின் இறந்து கரை ஒதுங்கியது.;
சாயல்குடி, ட
சாயல்குடி அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய 2 டால்பின்கள் கடலில் விடப்பட்டன. மற்றொரு இடத்தில் பெண் டால்பின் இறந்து கரை ஒதுங்கியது.
வலையில் சிக்கிய டால்பின்கள்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம் கடல் பகுதியில் மீனவர்கள் கரைவலையை பயன்படுத்தி மீன் பிடித்தனர். வலையை இழுத்து கரைக்குகொண்டு வந்தபோது, அந்த வலையில் 2 டால்பின்கள் சிக்கி இருந்தன. இதையடுத்து மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மீனவர்கள் வலையில் சிக்கிய டால்பின்களை லாவகமாக மீட்டு, பின்னர் மீண்டும் கடலில் விட்டனர்.
கரையில் இருந்து மீனவர்கள், வனத்துறையினர் சேர்ந்து இழுத்து தண்ணீருக்குள் விட்ட பின்பு, அந்த 2 டால்பின்களும் மெதுவாக நீந்தி ஆழ்கடலை நோக்கி சென்றன.
இறந்து கரை ஒதுங்கியது
இந்த நிலையில் அதே பகுதியில் மற்றொரு இடத்தில் 8 மாத பெண் டால்பின் ஒன்று இறந்து கரை ஒதுங்கி கிடந்தது.
இதுகுறித்து அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் ஜெகதீஷ் சுதாகர் உத்தரவுப்படி கீழக்கரை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று விசாரித்தனர்.
பெண் டால்பின் உடலை பரிசோதனை செய்து பின்னர், கீழக்கரை வனவர் கனகராஜ் முன்னிலையில் அந்த பகுதியிலேயே புதைக்கப்பட்டது.