ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்கள்

கும்பகோணம் ரெயில்நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2023-04-28 19:58 GMT

கும்பகோணம்;

கும்பகோணம் ரெயில்நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ரெயில் நிலையம்

கும்பகோணம் ரெயில் நிலையம் 145 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோவில் நகரமான கும்பகோணம் பகுதிக்கு பொதுமக்கள் வந்து செல்ல ரெயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி தினமும் ஏராளமானவர்கள் கும்பகோணம் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரகணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். மேலும் வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகளும் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் ஏறி பிற மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.

நாய்கள் தொல்லை

இதன்காரணமாக ரெயி்ல் நிலையத்தில் எப்போதும் பயணிகள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நாய்கள் சில ரெயில் நிலையத்துக்குள் தஞ்சம் அடைந்துள்ளன.இவை நடைமேடைகளில் உள்ள இருக்கைகளில் படுத்துக்கொள்கின்றனர். பயணிகள் கொண்டு வரும் உணவுகளை தூக்கி செல்கின்றன. நடைமேடையில் கூட்டமாக நின்று சண்டை போடுகின்றன.

பயணிகள் அவதி

இதனால் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் நாய்கள் கடித்துவிடும் என அச்சத்துடன் நடைமேடையில் ரெயிலுக்காக காத்திருக்கின்றனர்.எனவே, பயணிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கும்பகோணம் ரெயில் நிலையத்துக்குள் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Tags:    

மேலும் செய்திகள்