பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்கள்

திருமருகலில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நாய்களை பிடித்து அறப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-31 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகலில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நாய்களை பிடித்து அறப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அச்சுறுத்தும் நாய்கள்

திருமருகல் ஊராட்சி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வேளாண்மைத்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு ஒன்றிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் திருமருகல் பகுதியில் நூற்றுக்கும் அதிகமான நாய்கள் கூட்டம். கூட்டமாக சுற்றித்திரிக்கின்றன.இந்த நாய்கள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் நடந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி கடித்து அச்சுறுத்தி வருகிறது.

பிடிக்க வேண்டும்

வீடுகளில் வளர்க்கும் ஆடு, கோழி, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கடித்து குதறி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து திருமருகலில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்