விபத்தை ஏற்படுத்தும் நாய்கள்

ஆலங்குளம் பகுதியில் நாய்களால் விபத்து ஏற்படுகிறது.

Update: 2023-07-13 21:53 GMT

ஆலங்குளம், 

ஆலங்குளம், சங்கரமூர்த்திபட்டி, இருளப்பநகர், ஏ.லட்சுமிபுரம், கீழாண்மறைநாடு, வலையபட்டி, மேலாண்மறைநாடு, கல்லமநாயக்கர்பட்டி, மாதாங்கோவில்பட்டி, எதிர்கோட்டை, எட்டக்காபட்டி, இ.டி. ரெட்டியபட்டி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது.

இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வருபவர்களும் சிரமப்படுகின்றனர். நாய்களால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்