வடபட்டியில் நாய்கள் தொல்லை

வடபட்டியில் நாய்கள் தொல்லை;

Update: 2023-02-18 18:37 GMT

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள வடபட்டி கிராமத்தில் சுமார் 1500-க்கும் அதிகமாக குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக நாய்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். 10-க்கும் குறைவான நாய்கள் இருந்து வந்த நிலையில் தற்போது 50-க்கும் மேற்பட்ட நாய்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரே பகுதியில் குறைந்தது 10-க்கும் மேற்பட்ட நாய்கள் வலம் வருவதால் பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும் அச்சத்துடன் சென்று வருவதாக அந்த பகுதியை சேர்ந்த ராமு என்பவர் தெரிவித்தார். இதேபோல் இரவு நேரங்களில் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துகிறது. இதனால் அதிவேகமாக செல்பவர்கள் விபத்துக்களின் சிக்கி காயம் அடைகிறார்கள். இங்குள்ள பல நாய்களுக்கு வெறி பிடித்து இருப்பதாக அப்பகுதி மக்கள் பதற்றத்துடன் தெரிவிக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபரீதம் ஏற்படுவதற்கு முன்னர் வடபட்டி பகுதியில் உள்ள நாய்களை பிடித்து அங்கிருந்து அகற்ற தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்