சேலத்தில் அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி

Update: 2023-08-27 19:53 GMT

சேலம்

சேலத்தில் அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி நேற்று நடந்தது.

நாய்கள் கண்காட்சி

சேலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலம்4 ரோடு சிறுமலர் பள்ளி வளாகத்தில் நேற்று அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், போபால், மராட்டியம், மேற்கு வங்கம், புனே உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 45 வகையான சுமார் 425 நாய்கள் கலந்து கொண்டன.

இந்த நாய்கள் கண்காட்சியில் பொமேரியன், டேஸ்ஹவுண்ட், பீகிள், ராட்வீலர், டால்மேசன், கிரேட்டன், செயின்ட், பெர்னார்டு, டாபர்மேன், மினியச்சர், பின்சர், காக்கர் ஸ்பேனியல், சலூகி, பூடுல் மற்றும் இந்திய வகை நாய் ராஜபாளையம் உள்ளிட்ட 425 வகையான நாய்கள் கலந்து கொண்டன. பின்னர் ஒவ்வொரு பிரிவு வகை நாய்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

பரிசுகள்

நாய்களின் அழகு, சுறுசுறுப்பாக இயங்குதல், சாகசம் செய்தல், உரிமையாளரின் சொல்லுக்கு கட்டுப்படுதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த நாய்கள் கண்காட்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கண்காட்சியில் நாய்களுக்கு தேவையான உணவு பொருட்கள், உபகரணங்கள் வாங்க ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நாய்கள் கண்காட்சி நடுவர்களாக டாசன், அன்டோனியா, ரஞ்சித், முன்ஜால் ஆகியோர் செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தி சேலம் அக்மெ கென்னல் கிளப் தலைவர் விசு காளியப்பன், செயலாளர் சாந்தமூர்த்தி, பொருளாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்