தெருநாய் கடித்து குதறியதில் தூங்கி கொண்டிருந்த முதியவர் படுகாயம்
தெருநாய் கடித்து குதறியதில் தூங்கி கொண்டிருந்த முதியவர் படுகாயம்
பவானி அடுத்த தளவாய்பேட்டை சின்ன வடமலைபாளையத்தை சேர்ந்தவர் இருளப்பன் (வயது 80). இவருடைய மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் இருளப்பன் தனது மூத்த மகன் பராமரிப்பில் வசித்து வந்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் ஓலை குடிசையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் திடீரென இருளப்பனை கடித்து குதற தொடங்கியது. இதனால் வலியால் அவர் அலறி துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாய்களை அங்கு இருந்து விரட்டி விட்டனர். பின்னர் அவரை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள