ஈரோட்டில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி
ஈரோட்டில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி
ஈரோடு மாநகர் பகுதியில் சமீப காலமாக தெருநாய்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து உள்ளது. இரவு நேரங்களில் தெருக்களில் செல்லும் வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்துவது தொடர்கதையாகி வருகிறது. மேலும் தெருக்களில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளையும் நாய்கள் துரத்திச்சென்று கடிப்பதால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
எனவே ஈரோடு மாநகர் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவற்றுக்கு வெறிநோய் தடுப்பூசி போட வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி நேற்று ஈரோடு மோளகவுண்டம் பாளையம் பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்களை, மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து அவற்றிக்கு கால்நடை டாக்டர்கள் வெறிநோய் தடுப்பூசி போட்டனர்.
-----------------
படம்.
----
Reporter : N. ALBERT_Staff Reporter Location : Erode - ERODE