பாதுகாப்பற்ற நிலையில் வைக்கப்பட்ட ஆவணங்கள்

பாதுகாப்பற்ற நிலையில் வைக்கப்பட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-23 19:01 GMT

அணைக்கட்டை தலைமயிடமாக கொண்டு கடந்த 2013-ம் ஆண்டு தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தாலுகா அலுவலகம் செயல்பட தொடங்கியது. இதனையொட்டி அணைக்கட்டு தாலுகாவுக்குரிய கிராமங்களின் ஆவணங்கள் அணைக்கட்டு தாலுகாவிற்கு மாற்றப்பட்டன.

இதில் பிறப்பு, இறப்பு குறித்த ஆவண சான்றிதழ்கள், விவசாயிகளின் அடங்கல்கள் பத்திரப்பதிவுகள் என ஆவணங்கள் அடங்கும்.

தாலுகா அலுவலகம் செயல்பட தொடங்கிய பிறகு பதிவறையில் இந்த ஆவணங்களை பத்திரமாக வைக்க போதுமான பீரோ, அலமாரி போன்ற எந்தவசதிகளும் இதுவரை செய்யப்படவில்லை.

இதற்கு போதுமான அலுவலலர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஆவணங்கள் தரையில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் ஜன்னல் வழியாக மழைநீர் உள்ளே வரும்போது அவை நனைந்து சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.

பொது மக்களுக்கு தேவையான ஆவணங்களை இந்த பதிவறையில் இருந்து எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தாலுகா அதிகாரிகள் உள்ளதால். அந்த ஆவணங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்