மருத்துவரின் கார் திருட்டு

தூத்துக்குடி அருகே மருத்துவரின் கார் திருடு போனது.

Update: 2023-01-21 18:45 GMT

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை காமராஜ் நகரைச் சேர்ந்தவர் காலேப்ஹென். மருத்துவரான இவர் புதுக்கோட்டையில் உள்ள தனது மருத்துவமனை அருகே உள்ள குடோனில் தனது காரை கடந்த 13-ந் தேதி நிறுத்திவிட்டு வெளியூர் சென்றாராம். பின்னர் அவர் 18-ந் தேதி வந்து பார்த்தபோது, அவரின் கார் மற்றும் செல்போன் ஆகியவை திருடு போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்