மோட்டார் சைக்கிள் மோதி டாக்டர் படுகாயம்

களக்காட்டில் மோட்டார் சைக்கிள் மோதி டாக்டர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-06-26 20:18 GMT

களக்காடு:

களக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 72). டாக்டரான இவர் களக்காட்டில் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலை டாக்டர் சொக்கலிங்கம் தனது நண்பருடன் களக்காடு-சேரன்மாதேவி சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக தெற்கு சிங்கம்பத்தை சேர்ந்த சதக் அப்துல்லா (47) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சொக்கலிங்கம் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அவரது மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்