சேத்துப்பட்டு அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த டாக்டர் பலி

சேத்துப்பட்டு அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2023-10-01 01:37 GMT

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் அபுதாபி (வயது 38). சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 24-ந்தேதி தனது சொந்த ஊரில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்துகொண்டிருந்தார். ரெயில் சேத்துப்பட்டு அருகே வந்துகொண்டிருந்தபோது படிகட்டு அருகே வந்து நின்றிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி டாக்டர் அபுதாபி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்