இந்து சமய அறநிலையத்துறையை இழுத்து மூடுவோம் என்பதா? - அண்ணாமலைக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்

இந்து சமய அறநிலையத்துறையை இழுத்து மூடுவோம் என்ற கருத்து தொடர்பாக அண்ணாமலைக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.;

Update:2023-01-29 01:32 IST

சென்னை,

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் (தமிழ்நாடு), தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையை இழுத்து மூடி விடுவோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். இதை அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

துறைமுகம், விமான நிலையம் போல கோவிலையும் தனியார் மயமாக்க அனுமதிக்க மாட்டோம். இந்து சமய அறநிலையத்துறையை பாதுகாப்போம். கோவில்கள் அரசு கண்காணிப்பில் இருப்பதால்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமித்துள்ளார். அரசின் முயற்சிக்கு நாங்கள் துணை நிற்போம் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்