அரசு பேருந்துகளில் பயணிகளிடம் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வாங்க வேண்டாம்- போக்குவரத்து கழகம்

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 2 ஆயிரம் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Update: 2023-05-21 12:18 GMT

சென்னை,

செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வருகிற 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 2 ஆயிரம் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக  போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 

இந்திய ரிசர்வ் வங்கி 19.05.2023 தேதி அறிக்கையில் ரூபாய் 2000 இந்திய நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறும் முடிவை அறிவித்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.20,000/- வரை வங்கியில் வரவு வைக்க முடியும் அல்லது மாற்றிக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக 2000 ரூபாய் நோட்டுகளை கழகத்தால் வங்கியில் செலுத்த இயலாத நிலை உள்ளதால், 23.05.2023 ஆம் தேதி முதல் நடத்துனர்கள் அனைவரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் பக்குவமாக எடுத்துரைத்து 2000 ரூபாய் நோட்டுகளை வழித்தடத்தில் வாங்குவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்