பொதுஇடத்தில் கட்டிட இடிபாடுகளை கொட்டினால் அபராதம்

தஞ்சை மாநகராட்சி பகுதியில் பொதுஇடத்தில் கட்டிட இடிபாடுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என ஆணையர் சரவணகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-03-15 22:07 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டிடம் இடிக்கும் பணிகளை மேற்கொள்பவர்கள் கட்டிட இடிமண், கட்டுமான கழிவுகள் உள்ளிட்டவற்றை குப்பைகளுடன் கலந்து கொட்டினாலோ, அரசுக்கு சொந்தமான, பொது இடங்களில் கொட்டினாலோ மாநகராட்சி நிர்வாகத்தால் அபராதம் விதிக்கப்படும். மேலும் கட்டிடங்களை இடிக்கும் பணியை மேற்கொள்பவர்கள் கட்டிட இடிமண் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். கட்டுமான பணியை மேற்கொள்பவர்கள் இடிமண் தேவைப்படுவோர் 04362- 231021 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்