ராயகிரியில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது; தாசில்தாரிடம் பா.ஜ.க.வினர் மனு
ராயகிரியில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என தாசில்தாரிடம் பா.ஜ.க.வினர் மனு கொடுத்தனர்.;
சிவகிரி:
வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சோழராஜன் தலைமையில் பா.ஜ.க.வினர் சிவகிரி தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், ''ராயகிரியில் டாஸ்மார்க் கடையை திறக்க அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிய வருகிறது. இந்த பகுதிகளில் சிறந்த கல்விக்கூடங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்கள் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். இப்பகுதியில் டாஸ்மாக் கடையை திறந்தால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருப்பதோடு மக்களின் அமைதியான வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், ராயகிரியில் டாஸ்மார்க் கடையை திறக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஓபிசி துணைத்தலைவர் தங்கம், மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளர் ராகவன், ராயகிரி நகர தலைவர் கணேசன் ஒன்றிய பொருளாளர் மாடசாமி, பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் மெக்கன் பெருமாள், ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் முருகேசன், சபரிமலை மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.