கால்நடை பராமரிப்புத்துறையில் வேலை வாய்ப்பு இருப்பதாக வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் தகவல்களை கண்டு ஏமாற வேண்டாம்
கால்நடை பராமரிப்புத்துறையில் வேலை வாய்ப்பு இருப்பதாக வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் தகவல்களை கண்டு ஏமாற வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் விலங்கு கையாளுபவர், விலங்கு கையாளுபவர் மற்றும் இயக்கி ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு எனவும், சம்பளம் முறையே ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.18 ஆயிரம் எனவும், தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு, 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும், விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்திடுமாறும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பணியிடங்கள் நிரப்பப்படும் என தவறான தகவல்கள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்பு இருப்பதாக வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானது. பொதுமக்கள் எவரும் போலியான இச்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.